Latestமலேசியா

3 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட காஜாங் மகளிர், குழந்தைகைள் மருத்துவமனை புதிய வளாகம் சுகாதார அமைச்சிடம் விரைவில் ஒப்படைப்பு

காஜாங், ஜூன் 3 – 305 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட காஜாங் மருத்துவமனைக்கான மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வளாகம் இம்மாதம் முழுமையடையவிருப்பதை தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும்.

135ஆண்டு காலமாக தற்போது இருந்துவரும் 306 படுக்கைகளைக் கொண்ட காஜாங் மருத்துவமனையின் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் திறக்கபடவிருக்கும் புதிய மருத்துவமனை வளாகம் கூடுதலாக 272 கட்டில்களை கொண்டிருக்கும்.

இந்த புதிய வளாகம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையடைந்திருக்க வேண்டும். எனினும் அந்த திட்டம் முடிவுறும் தருவாயில் அதன் குத்தகையாளரும் பொதுப்பணித்துறையும் அந்த புதிய வளாகத்தை ஒப்படைக்கும் தேதியில் பல முறை ஒத்திப்போட்டதாக தகவல்கள் கூறின.

தற்போது இந்த புதிய வளாகத்தின் 99 விழுக்காடு பகுதி முழுமையடைந்துவிட்டது . எஞ்சிய பகுதி ஜூன் 30ஆம் தேதி முழுமையடைந்தவுடன் திட்டமிட்டடி சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவு, பல்வேறு கிளினிக்குகள் , அறுவை சிகிச்சைக்கான ஆறு அறைகள், மற்றும் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கார் நிறுத்தும் பகுதி ஆகியவை கொண்ட இந்த புதிய வளாகம் காஜாங் மற்றும் உலு லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த 1.2 மில்லியன் மக்களுக்கு பெரும் நன்மையாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஜாங் மருத்துவமனைக்கான இந்த புதிய வளாகத்தின் கட்டுமான பணியை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தொடக்கிவைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!