கெடா, மே 20 – 2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகள், வருகின்ற மே 27ஆம் திகதி வெளியிடபடவிருக்கின்றன.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்தான் அடுத்த கட்டமான, STPM, மெட்டிகுலேஷன்ஸ், ‘ஏ லெவல்’, டிப்ளோமா போன்ற மேற்படிப்புகளுக்கான முக்கிய நுழைவுச் சீட்டாகும் .
இப்படி மேற்கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு நிச்சயமாக எந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுப்பது, அங்கு சூழல் எப்படி இருக்கும், குடும்ப பணச்சூழலுக்கு ஏற்ப மேற்கல்விக் கட்டணம் அமையுமா போன்ற பல குழப்பங்கள் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
இவர்களின் இந்த குழப்பத்தைக் களையத்தான்
, கெடாவில் அமைந்திருக்கின்ற ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், SPM முடித்த மாணவர்களுக்கு, தனது பல்கலைக்கழக வளாகத்தில் 3 நாள் ப்ரீ பவுண்டேஷன் நிகழ்ச்சி ஒன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பவுண்டேஷன் கல்வி திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஒரு பட்டறையாகவும் அமைந்த இந்த 3 நாள் நிகழ்ச்சி, பல்கலைக்கழக வாழ்க்கைக்கான ஒரு முன்னோட்டமாகவும் தங்களுக்கு அமைந்திருந்ததாக இதில் பங்கெடுத்த மாணவர்கள் பலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
மருத்துவம் தொடங்கி வணிகத்துறை வரை பவுண்டேஷன் எனப்படும் அடிப்படைப் கல்வி வாய்ப்பினை வழங்கி வருகிறது ஏய்மஸ்ட் பல்கலைக்கழகம்.
கடந்த 13 முதல் 15 மே வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 40 மாணவர்கள் பங்கெடுத்து பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சி, தேர்வு முடிவுகளுக்குப் பின் மாணவர்கள் தங்களின் எதிர்காலப் பாதையை தெரிவு செய்ய ஒரு வழிகாட்டியாகவும் அமைந்தது என ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பவுண்டேஷன் கல்வி திட்டம் குறித்த மேல் விவரங்களுக்கு ஏற்பாட்டு குழுவினரை தொடர்பு கொள்ள, பெற்றோர்களும் மாணவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.