கோலாலம்பூர், ஜூலை 30 – சீன குடிமக்களுக்கு மலேசியா வழங்கிய 30 நாள் விசா விலக்கு சலுகையை, சீன அரசாங்கமும் பின்பற்றும் என மலேசியா நம்புவதாக,வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
தற்சமயம், மலேசியர்கள் 15 நாட்களுக்கு, விசா இல்லாமல் அந்நாட்டிற்கு செல்லும் வசதிகளை சீனா வழங்குகிறது.
எனினும், பரஸ்பர கொள்கை அடிப்படையில், நாம் வழங்கி இருக்கும் 30 நாள் விசா விலக்கு சலுகையை, சீனாவும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஹசான் சொன்னார்.
சீனாவிற்கு சுற்றுலா செல்லவும், வர்த்தக பயணங்களை மேற்கொள்ளவும், அந்நாட்டு மக்களுடன் மலேசியர்கள் இருவழி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் அது உதவியாக இருக்குமென, மேலவை கேள்வி பதில் நேரத்தின் போது ஹசான் முஹமட் நம்பிக்கை தெரிவித்தார்.