பிரான்ஸ், ஏப்ரல் 12 – 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பிரான்ஸ், பாரிசில் வருகின்ற ஜூலை மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இதனை முன்னிட்டு, Babtiste Chebassier எனும் பிரான்ஸ் கலைஞர் ஒருவர், நவீன ஒலிம்பிக் விளையாட்டின் 128 ஆண்டுக் கால வரலாற்றில் பதக்கம் வென்ற 30,249 வெற்றியாளர்களின் பெயரைத் தாளில் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.
வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 27 வயதான அந்த பிரான்ஸ் கலைஞர், இதற்காகத் தனது முழு நேர வேலையைக் கைவிட்டிருக்கிறார்.
3 ஆண்டுகளுக்கு முன் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட இவர், 1896ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து அவர் வெற்றியாளர்களின் பெயர்களைத் திரட்டியுள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு, 120 மீட்டர் நீளம் கொண்ட மறுபயனீட்டுத் தாளில் அந்த வெற்றியாளர்களின் பெயர்களை எழுதி முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார்.