புத்ராஜெயா, மே 16 – ஆபத்து குறைந்த மேலும் 36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகள், ஜூன் முதலாம் தேதி முதல் மலேசியாவின் முக்கிய நுழைவாயில்களில் உள்ள “ஆட்டோ கேட்களைப்” பயன்படுத்தலாம் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
தற்சமயம் அந்த சலுகை 10 நாடுகளில் இருந்து வருகை புரியும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதையும் சைபுடின் சுட்டிக் காட்டினார்.
அந்த பட்டியலில் புதிதாக 36 நாடுகளை இணைப்பதன் மூலம், மொத்தம் 46 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி குடிநுழைவுத் துறை முகப்புகளுக்கு செல்வதை தவிர்த்து ஆட்டோ கேட்களைப் பயன்படுத்த முடியும்.
இந்த முயற்சியின் வாயிலாக, நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் குடிநுழைவு சோதனைகளை விரைவுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, மொத்தம் 40 millionக்கும் அதிகமான பயணிகள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
அதில், 30.5 million பேர் KLIA 1 மற்றும் இரண்டாவது முனையங்கள் வாயிலாகவும், எஞ்சியவர்கள் Johor-Singapore Causeway மற்றும் இரண்டாவது இணைப்பு வழியாகவும் நாட்டிற்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.