கோலாலம்பூர், மே 29 – ஒட்டு மொத்தமாக 39,800 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சுங்கத்துறையின் 4 அமலாக்க உதவியாளர்கள் மீது ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 49 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. நீதிபதி Datuk Anita Harun முன்னிலையில் தனித்தனியாக 43 வயதுடைய Mohd Rizal Othman, 39 வயதுடைய Mohd Hanafie Che Mat, 39 வயதுடைய Mohd Sharil Mohd Sukaimi,
48 வயதுடைய Alias Mat Yusop ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
15,350 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக Mohd Rizal மீது 9 குற்றச்சாட்டுகளும் , 12,600 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக Mohd Hanafie மீதும் 10 குற்றச்சாட்டுக்களும் கொண்டு வரப்பட்டது. மேலும் 8,450 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக Mohd Shahril மீது 26 குற்றச்சாட்டுகளும். 3,400 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக Alias சிற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களும் கொண்டு வரப்பட்டது.
KLIA 2 ஆவது விமான நிலையம், Bandar Puchong Jaya, Bandar Baru Salak Tinggi மற்றும் Kajang கில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. KLIA சரக்கு முனையத்திலிருந்து ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான லோரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளியேறும்போது சோதனையிடாமல் இருப்பதற்காக அந்த நால்வரும் லோரி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். அந்த நால்வருக்கும் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஜூலை 11ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.