கோலாலம்பூர், அக்டோபர் 3 – இவ்வாண்டு மூன்றாம் முறையாக மலர்ந்திருக்கிறது நம்பிக்கை நட்சத்திர விருது விழா.
கலைத் துறை மற்றும் சமூக ஊடக கலைஞர்களுக்கு என்று இரு பிரிவுகளில், விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 30ஆம் தேதி, பேங்க் ரக்யாட் மாநாட்டு மண்டபத்தில், நடைபெறுகிறது.
ஒவ்வொரு பிரிவில் ஐந்து பேர் வேட்பாளர் எனும் நிலையில், கலை மற்றும் சமூக ஊடகம் சார்ந்த 23 விருதுகள், பத்து நாட்களுக்கு முன்னதாக மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என்று நம்பிக்கை குழுமம் தெரிவித்துள்ளது.
இதில், “மலேசிய மாமனிதர்” துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கலைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளன.
மேலும், இவ்வாண்டில், மொழி, கலை, இலக்கியம், தொழில்துறை சார்ந்து 40 விருதுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் முதல் முறையாக 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட வேளையில், கடந்த ஆண்டில், 32 பேருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.