கோலாலம்பூர், டிச 16 – இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நான்கு மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும் என Met Malaysia எனப்படும் மலேசியா வானிலைத்துறை எச்சரித்துள்ளது.
பாதிக்கப்படவிருக்கும் மாநிலங்களில் கிளந்தான், திரெங்கானு பேராவில் உலு பேரா ஆகியவவையும் அடங்கும்.
பகாங்கில் ஜெராண்டூட், மாரான் , குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பினும் அடங்கும் என மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
சரவாவில் கூச்சிங், Serian, Samarahan, Sri Aman , Betong, Sarikei , Sibu மற்றும் Mukah ஆகிய இடங்களில் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 22 ஆம்தேதிவரை வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.