Latestமலேசியா

4 வயதில் கால அட்டவணைக் கூறுகளை அடையாளம் கூறும் அறிவு ஜீவி குழந்தை ஜெய்மித்ரா

கோலாலம்பூர், டிசம்பர்-15,4 வயதில் குழந்தைகள் பெரும்பாலும் ABCD-களைக் கற்பது தான் வழக்கம்.

ஆனால், ஜெய்மித்ரா வாசகம் அவர்களை விட சற்று வித்தியாசப்படுகிறார்.

இச்சிறிய வயதிலேயே
periodic table elemets எனப்படும் கால அட்டவணையின் அனைத்து 118 கூறுகளையும் அவர் அடையாளம் காட்டுகிறார்.

அதுவும் வெறும் 1 நிமிடம் 35 வினாடிகள் என்ற சாதனை நேரத்திற்குள்.

ஏற்கனவே தேசியக் கொடிகளை சரியாக அடையாளம் காட்டி சாதனைப் படைத்தவரான இந்த அதிசயக் குழந்தை, தனது அடுத்த பெரிய சவாலாக இந்த கால அட்டவணையை அண்மையில் கையிலெடுத்தார்.

ஆறே வாரங்களில் பயிற்சிப் பெற்று, மலேசியச் சாதனைப் புத்தகம், இந்தியச் சாதனைப் புத்தகம், அனைத்துலகச் சாதனைப் புத்தகம், ஆசியச் சாதனைப் புத்தகம் என பல்வேறு சாதனைப் புத்தகங்களின் அங்கீகாரத்தைப் பெற்று ஜெய்மித்ரா ஆச்சரியமூட்டியுள்ளார்.

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இந்த கால அட்டவணைக் கூறுகளை அவர் பயிற்சி செய்து வந்துள்ளார்.

ஒரு நாளைக்கு 2 முதல் 5 கூறுகளை அவர் பயிற்சி செய்துள்ளார்.

மகளின் இந்த அபரிமித ஆற்றல் ஒரு விபத்தல்ல என்கிறார் ஜெய்மித்ராவின் 30 வயது பெருமைமிகு தாய் Dr மதிவதனி.

மாறாக, மகளுக்கு ஒழுக்கம், விளையாட்டு, கற்றல் ஆகியவற்றை சரியாக ‘கலந்தூட்டியதன்’ பலனே அதுவென, NST-யுடனான சிறப்பு நேர்காணலில் மதிவதனி கூறினார்.

குறிப்பாக இரவில் சீக்கிரமாக தூங்குவது, கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் மதிவதனி கண்டிப்பாக இருந்துள்ளார்.

கைப்பேசிகளில் செலவிடும் நேரத்தை வெளியில் விளையாடச் செல்வது, Scooby-Doo’ , ‘Tom & Jerry’ போன்ற கார்டூன்களைப் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஜெய்மித்ரா செலவிட்டுள்ளார்.

மிட்டாய்கள், சாக்லெட்டுகள் இல்லாத ஆரோக்கியமான உணவு முறையும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
பியானோ வாசிப்பதும் ஜெய்மித்ராவின் அறிவாற்றலை மேம்படுத்தியிருப்பதாகக் கருத்தும் மதிவதனி, அடுத்து சதுரங்க விளையாட்டையும் மகளுக்கு மெல்ல அறிமுகப்படுத்தி வருகிறார்.

இவ்வேளையில் எதிர்கால ஆசை என்னவென்று கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் பெருநிறுவனமொன்றின் CEO ஆவேன் என்கிறார் ஜெய்மித்ரா…..

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!