Latestமலேசியா

4 கிப்பன்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற பெண் கைது

செப்பாங், மார்ச் 2 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான
KLIA வில் நான்கு Gibbon களை வெளிநாடுகளுக்கு கடத்தும் முயற்சி நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

KLIA வின் முதலாவது முனையத்தில் சந்தேகத்திற்கிடமான சாமான்களை சோதனை செய்த பின்னர், இரவு மணி 10.50 அளவில் 38 வயது உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் (பெர்ஹிலிடன்) துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாசிம் ( Abdul Kadir Abu Hashim )தெரிவித்தார்.

சந்தேக நபர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் திருச்சிராப்பள்ளிக்கு விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டிருந்தபோது PERHILITAN உறுப்பினர்களும் விமான நிலைய பாதுகாப்புக் குழுவும் சோதனைகளை நடத்தினர்.

அதனை தொடர்ந்து அந்த Gibbon கள் சாமான்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணைக்காக KLIA Perhilitan அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அப்துல் காதிர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!