Latestமலேசியா

4 நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள்; கோலாலம்பூர் புத்தகக் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு

கோலாலம்பூர், ஜூன்-2-கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (PBAKL) 2026, முதல் 4 நாட்களிலேயே 10,12,138 பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

நீண்ட பள்ளி விடுமுறை மற்றும் ஹாஜி பண்டிகை காரணமாக வருகை குறையலாம் என அஞ்சப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பை மீறி மக்கள் பெருமளவில் வருகை தந்துள்ளனர்.

பிரதமரின் வருகை மற்றும் மாணவர்களுக்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மடானி புத்தக வவுச்சர் திட்டம் இந்த வரவேற்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதனால் புத்தக விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில பதிப்பகங்கள் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிக விற்பனை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு பல புதிய வாசகர்கள் வருகை தந்துள்ளதும், மலேசிய புத்தகத் துறையின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!