Latestமலேசியா

4 மைகார்டுகளை பயன்படுத்தி ரோன் 95 பெட்ரோல் வாங்கிய ஆடவர் கைது

கோலாலம்பூர், ஏப்-3-ஆடவர் ஒருவர் 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்குவதற்காக நான்கு MyKad அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிளாந்தான் போலீஸ் துறை அந்நபரை கைது செய்துள்ளது.

தும்பாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சந்தேக நபர் பெட்ரோல்
வாங்கிக்கொண்டிருந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் யூசோப் மமாட் (Yusoff Mamat ) கூறினார்.

இந்த விவகாரம் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மீது 1959 ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆடவருக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைக்காக, போலீஸ்துறை மற்ற பொருத்தமான சட்ட விதிகளை ஆராயும்.

தாய்லாந்திலிருந்து கிளந்தானுக்கு டீசலைக் கடத்த மலேசியர்கள் முயற்சித்ததாக எந்த வழக்குகளும் இல்லை என்றும் யூசோப் கூறினார்.

இதுவரை, எல்லையைக் கடந்து டீசலைக் கொண்டுவர முயன்ற எந்த மலேசியரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

தற்போது தாய்லாந்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் 38 பாட் அதாவது 4 ரிங்கிட் 82 சென் ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!