
சிரம்பான், ஜூலை-23-மலேசியாவில் 40,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மன அழுத்தம் மற்றும் உளவியல் சார்ந்த மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் அதிக ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுச் சேவை இலாகாவான JPA-வின் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ Wan Ahmad Dahlan Abdul Aziz அதனைத் தெரிவித்தார்.
பொதுச் சேவை உளவியல் பிரிவு டிஜிட்டல் முறை MyPsyD மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 44,900-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அதிக மன அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், அவர்கள் தங்களைத்தானே மாய்த்துக் கொள்ளும் போக்கையோ அல்லது எதிர்மறையான செயல்களில் ஈடுபடும் நிலையையோ கொண்டிருப்பது கண்டறியப்பட்டதை Wah Ahmad சுட்டிக் காட்டினார்.
பணியிடங்களில் ஏற்படும் தீவிர வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்தைக் கையாளத் தவறுவதே இதற்கு முதன்மைத் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், ஆரம்பக்கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் JPA சார்பில் தீவிர ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்..



