
துருக்கி, அக்டோபர் 25 – துருக்கியில் நிகழ்ந்த ஒரு வினோதமான வழக்கு தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது. தனது முன்னாள் மனைவியின் பெயரை தொலைபேசியில் ‘tombek’ அதாவது ‘குண்டு’ என்று வைத்திருந்ததால், நீதிமன்றம் ஆடவர் ஒருவருக்கு அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
அந்த சொல் மனைவியின் மரியாதையைக் குறைக்கும் விதமாகப் பயன்படுத்தப்பட்டதால், அந்நபர் அவரது மனைவிக்கு நஷ்ட ஈடு தொகையைச் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் பணித்துள்ளது.
இந்த வினோதமான தீர்ப்பு துருக்கி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. சிலர் “‘பருமன்’ என்று அழைப்பது அவமானம் அல்ல என்றும் அது அன்பாகப் பேசும் முறையாக கூட இருக்கலாம் என்றும் கருத்துரைத்து வருகின்றனர்.
ஆனால் பலர் குறிப்பாக பெண்கள், நீதிமன்றத்தின் முடிவை பாராட்டி, பெண்களின் மரியாதை மற்றும் மனநிலையைப் பாதுகாக்கும் முக்கிய முன்னேற்றம் என அதனை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் துருக்கியின் குடும்பச் சட்ட நிபுணர்கள் இதை உணர்ச்சி ரீதியான வன்முறை என்று வரையறுத்து, வாய்மொழி அல்லது பெயரிடும் முறையில் அவமதிப்பு நடந்தாலும் அது சட்ட ரீதியில் குற்றமாக கருதப்படும் என வலியுறுத்தினர்.



