
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
2020 முதல் 2025 வரை 91 அதிகாரிகள் மற்றும் 1,778 பணியாளர்கள் கைதாகியுள்ளதாக, உள்துறை அமைச்சு கூறுகிறது.
அவற்றில் 958 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் 911 பேர் மீதான புகார்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.
போதைப்பொருள் கடத்தல், வைத்திருத்தல், மற்றும் போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வி ஆகியவற்றை அப்புகார்களும் குற்றச்சாட்டுகளும் உட்படுத்தியுள்ளன.
போலீஸ் தரப்பில் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன…
அவ்வகையில் 511 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் 324 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டதாக, மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.



