Latestமலேசியா

6 ஆண்டுகளுக்கு முன் லஞ்சம் வாங்கிய குடிநுழைவுத் துறை அதிகாரியின் வழக்கு; RM6,000 அபராதம்

குவந்தான், செப்டம்பர் 13 – ஆறு ஆண்டுகளுக்கு முன் 1,830 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய குடிநுழைவுத் துறை அதிகாரியின் மேல் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், தற்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய, அந்த 43 வயது முஹமட் ரேசா ஹூசைன் (Mohd Reza Husain) எனும் குடிநுழைவுத் துறை அதிகாரி குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, 5000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின் படி, 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்த அந்த ஆடவர், பொழுதுபோக்கு மையங்களின் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார்.

அந்த மையங்களில் பணிபுரிய வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்ற கட்டயத்தில், அதன் நடத்துநர்களும் வழங்கியுள்ளனர்.

இதனிடையே, குற்றச்சாட்டப்பட்டவர் அவரது மனைவி, குழந்தைகள் உட்பட தீராத நோயால் பாதிக்கப்பட்ட தாயாரையும், ஊனமுற்ற இளைய சகோதரரையும் ஆதரிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், அவரின் வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் 6,000 ரிங்கிட் அபராதம் விதித்த நிலையில், செலுத்த தவறினால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!