
கோலாலம்பூர், செப் -24,
ஜோகூர் Iskandar Puteri யில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறு வயது சிறுமியை கடத்திய நபர் மற்றொரு சிறுமிக்கு எதிராக கடந்த வாரம் பாலியல் ரீதியிலான தாக்குதல் நடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இன்று நீதிபதி மடினா ஜைனோல் முன்னிலையில் 32 வயதுடைய Leong Win Son னுக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். செப்டம்பர் 14 ஆம்தேதி இரவு மணி 7.30 அளவில் கூலாய் தாமான் Iris சில் காப்பிக் கடையிலுள்ள கழிவறையில் 9 வயது சிறுமிக்கு எதிராக பாலியல் தாக்குதல் நடத்தியதாக லியோங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை மற்றும் பிரம்படி ஆகியவை வழங்கப்படும் 2017ஆம்ஆண்டின் சிறார் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது . லியோங்கிற்கு ஜாமின் அனுமதிக்கப்படவில்லை. அவன் மீதான குற்றச்சாட்டு மீண்டும் அக்டோபர் 6 ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.