Latestமலேசியா

6 வயது மகள் கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 குற்றச்சாட்டு- ஆடவருக்கு 21 ஆண்டு சிறை 24 பிரம்படி

ஜோகூர் பாரு, மார்ச் 5 – தனது ஆறு வயது மகளை கற்பழித்தது மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் புரிந்தது தொடர்பான 13 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட ஒரு பாதுகாவலருக்கு ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதித்தது.

ஜனவரி 22 ஆம் தேதி இரவு மணி 11.35 மணி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி காலைவரை ஜோகூர் பாருவில் , கம்போங் கெம்பாஸ் பாருவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றங்களை புரிந்ததாக அந்த 43 வயது நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வழக்கின் உண்மைகளை ஆராய்ந்த பின்னர், நீதிபதி மடிஹா ஜைனோல் ( Madihah Zainol) மற்றும் நீதிபதி நோர் அசியாட்டி ஜாபர்( Nor Aziati Jaafar ) ஆகியோர் இரண்டு தனித்தனி நீதிமன்ற அறைகளில் அந்த நபருக்கு தண்டனையை விதித்தனர்.

குற்றவாளி கைது செய்யப்பட்ட நாளான பிப்ரவரி 18 ஆம் தேதியிலிருந்து 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பிரம்படிகளும் விதிப்பதாக நீதிபதி மடிஹா தீர்ப்பளித்தார்.

அதே வேளையில் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் சிறையும் 10 பிரம்படியும் விதிப்பதாக மற்றொரு நீதிபதியான நோர் அசியாட்டி தீர்ப்பளித்தார்.

இந்த இரண்டு தண்டணைகளை ஏகா காலத்தில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் குற்றவாளி மொத்தம் 21 ஆண்டுகள் சிறையை அனுபவிப்பதுடன் 24 பிரம்படிகளும் விதிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!