சுபாங் ஜெயா, ஏப் 2 – தலைமைத்துவம் மற்றும் தேசிய காற்பந்து சங்கத்தின் நிர்வாகத்தை குறைகூறி மொட்டை கடிதம் வெளியானதைத் தொடர்ந்து விசாரணைக்காக போலீசில் புகார் செய்வது குறித்து FAM எனப்படும் மலேசிய காற்பந்து சங்கம் பரிசீலித்து வருகிறது. அந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை அடையாளம் காண்பதற்காக MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் எப்.ஏ.எம் ஒத்துழைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோ Hamidin Mohd Amin தெரிவித்திருக்கிறார்.
அந்த மொட்டைக் கடிதம் ஊடகங்கள் உட்பட பல தரப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதுபோன்ற மொட்டை கடிதங்கள் தினசரி வந்துக் கொண்டிருந்தால் அது அனைவருக்கும் எரிச்சல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திவிரும். எனவே இந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவதற்கு நாங்கள் MCMC யுடன் ஒத்துழைப்போம் என்பதோடு போலீசில் புகார் செய்வதற்கும் மலேசிய காற்பந்து சங்கத்தின் நிர்வாகக்குழு முடிவு செய்ததாக Hamidin தெரிவித்தார்.