Latestமலேசியா

கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பெண் வேட்பாளரை DAP நிறுத்தக்கூடும்

கோலாலம்பூர், ஏப் 5 – எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் DAP பெண் வேட்பாளரை நிறுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. DAP மகளிர் பிரிவைச் சேர்ந்த சிலரது பெயர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மகளிர் பிரிவின் தலைவி Teo Nie Ching தெரிவித்திருக்கிறார். சிலாங்கூர் DAP யுடன் கலந்துரையாடல் நடத்தியபின் கட்சியின் உயர் தலைமைத்துவம் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கும் என அவர் கூறினார்.

DAP யின் தலைமைச் செயலாளர் Anthony Loke, கட்சித் தலைவர் Lim Guan Eng , துணைத்தலைவர் Gobind Sing Deo, உதவித் தலைவர் எம். குலசேகரன்,Ngah Kor Ming மற்றும் சிலாங்கூர் பிரதிநிதிகள் வேட்பாளர் குறித்த விவாதித்து முடிவு செய்வார்கள் என Teo Nie Ching தெரிவித்தார். 3 R எனப்படும் இனம், சமயம் மற்றும் அரச அமைப்பு ஆகிய மூன்று உணர்ச்சிகரமான விவகாரங்களை சம்பந்தப்படுத்தாமல் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இருக்க வேண்டும் என தொடர்புத்துறை துணையமைச்சருமான Teo Nie Ching கேட்டுக்கொண்டார். பல்வேறு சவால்களை நாம் எதிர்நோக்கினாலும் இந்த இடைத் தேர்தலை விவேகத்துடன் எதிர்நோக்குவோம என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!