பாசிர் மாஸ், ஏப்ரல் 8 – கிளந்தானில், இவ்வாண்டு ஜனவரியில் இருந்து நேற்று வரை, அனுமதியின்றி விற்கப்பட்ட, சுமார் 38 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள, பல்வேறு வகையிலான பட்டாசுகளையும், மத்தாப்புகளையும் மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாசிர் மாஸ், தும்பாட், ஜெலி, மாஞ்சாங், குவா மூசாங், பாசிர் பூத்தே ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதை, கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் ஜாக்கி ஹருன் உறுதிப்படுத்தினார்.
அந்த சோதனைகளின் போது, கைதுச் செய்யப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து, ஹரி ராயா காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள பொருட்களை வாங்கி வியாபாரம் செய்த சிறு வணிகர்கள் ஆவர்.
ஆகக் கடைசியாக, கடந்த சனிக்கிழமை, மாஞ்சாங் ரமலான் சந்தையில், அனுமதி இன்றி, பட்டாசுகளை விற்ற 18 மற்றும் 51 வயதான இரு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்ட வேளை ; அவர்களிடமிருந்து ஆயிரத்து 730 ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பறினுதல் செய்யப்பட்டதை, ஜாக்கி சுட்டிக்காட்டினார்.