கோத்தா கினபாலு, ஏப் 11 – சபாவில் Semporna கரையோரப் பகுதியில் நீரின் மேல் கட்டப்பட்ட வீடுகளுடன் தொடர்பை கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐவர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர், நேற்றிரவு மணி 8.03 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் Kampung Bangau – Bangau விலுள்ள பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்பு மற்றும் உதவி நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயம் அடைந்த அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.