சிட்னி, ஏப்ரல் 22 – 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கி வருகிறது அரிய வகை பச்சை நிற வால் நட்சத்திரம்.
அதனை வான்வெளியில் காணும் வாழ்நாள் வாய்ப்பைப் 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் பெறவிருப்பதாக அந்நாட்டு வானியற்பியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
அடையாளம் காண்பதற்கு சற்று கடினமே என்றாலும், இவ்வாரத்தில் அது மேலும் தெளிவாகத் தெரியலாம் என்றார் அவர்.
குறிப்பாக வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 25-ஆம் தேதி அதனை மேலும் தெளிவாகக் காண முடியும்.
வியாழன் கிரகத்திற்கு அருகில் அது இருப்பதாக ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Brad Tucker கூறினார்.
12P/Pons-Brooks என்ற பெயரைக் கொண்ட அந்த பச்சை நிற வால் நட்சத்திரத்தில் இரு கொம்புகள் இருப்பது போல் தெரிவதால், அது ‘சாத்தான்’ வால் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
34 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்ட அந்த வால் நட்சத்திரம், 71 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியைக் கடந்துச் செல்வதால், அதனைப் பார்க்கும் வாய்ப்பு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.