லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப்ரல் 22 – அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கேளிக்கைப் பூங்காவில் tram வாகனம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
வார இறுதி விடுமுறையின் போது ஏராளமான சிறார்கள் திரண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
பிரேக் பிரச்னையால் அவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், உண்மைக் காரணம் குறித்து இதுவரை தகவலேதும் இல்லை.
வழக்கமாக ஒரு நேரத்தில் 100 பேரை ஏற்றிச் செல்லும் அந்த Tram-மில் சம்பவத்தின் போது எத்தனைப் பேர் பயணித்தனர் என்பதும் சரியாகத் தெரியவில்லை.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறனர்.
இதையடுத்து கேளிக்கைப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.