கோலாலம்பூர், ஏப் 24 – Duke நெடுஞ்சாலையில் Touch ‘n Go ரீலோட் செய்வதில் வாகன ஓட்டிக்கும் டோல் சாவடி ஊழியருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பொதுமக்களின் கவனத்தைத் ஈர்த்தது.
Reloads எனப்படும் மதிப்பு கூட்டுவதற்கு ரொக்க தொகையை Touch ‘n Go தடத்தில் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது என அந்த ஊழியர் கூறியதைத் தொடர்ந்து அவரை கார் ஓட்டுனர் முட்டாள் என திட்டியதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தமது Touch ‘n Go கார்டில் டோல் கட்டணம் செலுத்துவதற்கான பணம் போதுமானதாக இல்லையென்பதை உணர்ந்தும் credit அல்லது debit கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் தடத்திற்கு செல்ல அந்த கார் ஓட்டுனர் மறுத்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த டோல் சாவடியின் ஊழியரின் குடும்ப உறுப்பினர் Azfa Mierul அது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Debit அல்லது Kredit கார்டு மூலமாக மட்டுமே Touch ‘n Go கார்டில் Reload செய்ய முடியும் என்பது நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை என்பதை டோல் சாவடி ஊழியர் கூறியும் அந்த கார் ஓட்டுனர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததோடு சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனருக்கு எதிராக போலீசில் புகார் செய்யும்படி டோல் சாவடி ஊழியருக்கு போலீசார் ஆலோசனை தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக அந்த ஊழியர் பதிவிட்டுள்ளார். இதனிடையே டோல் ஊழியரை அவமானப்படுத்திய கார் ஓட்டுனரின் செயலை நெட்டிசன்களும் சாடினர். அனைத்து தொழில்களிலும் பரஸ்பர மரியாதை வழங்கப்பட வேண்டுமென அவர்கள் வாதிட்டனர்.
4.30pm