Latestமலேசியா

KLIA வில் துப்பாக்கி சூடு நடத்திய ஆடவர் கொலை முயற்சி குற்றச்சாட்டை மறுத்தான்

சிப்பாங், ஏப் 25 – அண்மையில்   KLIA   முதலாவது முனையத்தில்   துப்பாக்கிக் சூடு நடத்தியதில் சம்பந்தப்பட்ட ஆடவன்  கொலை முயற்சி மேற்கொண்டது உட்பட இரண்டு குற்றச்சாட்டுக்களை   மறுத்து இன்று விசாரணை கோரியுள்ளான். 

 நீதிபதி  Arol  Abdullah    முன்னிலையில்  குற்றச்சாட்டு  வாசித்தபோது  38 வயதுடைய   Hafizul   Hawari    அதனை மறுத்தான்.  ஏப்ரல்  14ஆம்தேதியன்று    KLIA  முதலாவது முனையத்தில் பயணிகள் வந்தடையும்  பகுதியில் அதிகாலை மணி 1.09 அளவில்  Farah Isa என்பவருக்கு எதிராக கொலை முயற்சியல் ஈடுபட்டதாக  அவன்  மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால்   கூடியபட்சம்  20 ஆண்டுகள்வரை சிறை மற்றும் அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின்   307 ஆவது விதியின் கீழ்   Hafizul Hawari  மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

மேலும்   38 வயதுடைய   Nur  Hadith  zaini  என்பவருக்கு ஏப்ரல் 14ஆம்தேதியின்று அதிகாலை  மணி  1.09 அளவில்   காயம் விளைவித்தாக  Hafizul Hawari  க்கு எதிராக    இரண்டாவது  குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.   

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால்  20 ஆண்டுகள்வரை சிறை,அபராதம்  அல்லது பிரப்படி அல்லது  அவற்றில் இரண்டு தண்டனைகள் வழங்கப்படும். சுடும் ஆயுதத்தின்  மூலம்   காயம் விளைவித்ததாக குற்றவியல் சட்டத்தின்   326 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாடையும் Hafizul  Hawari  மறுத்தான். அவனுக்கு ஜாமின் வழங்குவதற்கு மறுத்த  நீதிபதி  Arol  அந்த இரு குற்றச்சாட்டுகளும்  ஜூன் 11 ஆம்தேதி மறுவாசிப்புக்கு  செவிமடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!