லுமுட், ஏப் 25 – லுமுட்டில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரச மலேசிய கடற்படையின் 10 அதிகாரிகள் மரணம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட அவர்களின் 21 பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் PTPTN எனப்படும் உயர்க்ல்வி கல்வி நிதிக் கழகம் ஆயிரம் ரிங்கிட்டை வழங்கவிருக்கிறது.
மேலும் மரணம் அடைந்தவர்களின் பிள்ளைகளில் எவராவது பல்கலைக்கழத்தில் பயின்று வந்தால் அவர்களது கல்வி முடியும்வரை கல்விக் கட்டனத்தை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Zambry Abdul Kadir தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிதி சிரமத்தை போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களது தரவுகளின்படி அந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் 21 பிள்ளைகள் இன்னமும் பள்ளியில் பயில்கின்றனர். அவர்கள் SSPN சேமிப்பு கணக்கை பெறுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக Zamry கூறினார். அதோடு அந்த பிள்ளைகளுக்கு உதவுவதற்கான திடடத்தை தற்காப்பு அமைச்சு கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் .