குவாலா குபு பாரு, ஏப்ரல் 26 – குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளராக, பெர்சாத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதியின் இடைக்காலத் தலைவர் Khairul Azhari Saut அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாத்தாங் காலியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் PN தலைவர் Tan Sri Muhyiddin Yassin அதனை அறிவித்தார்.
54 வயது Khairul Azhari-யின் தேர்வு PN உச்சமன்றத்தால் ஏகமனதாக முடிவுச் செய்யப்பட்டதாக Muhyiddin கூறினார்.
குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.
KKB சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP-யின் Lee Kee Hiong புற்றுநோய்க் காரணமாக காலமானதை அடுத்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.