கோலாலம்பூர், மே 2 – தலைநகர், சூரியா KLCC வளாகத்திலுள்ள, “ஸ்பா” ஓய்வு மையமும், “செளனா” உடற்பயிற்சி அறையும் தீயில் அழிந்தன.
அச்சம்பவம் தொடர்பில், நேற்றிரவு மணி 11.34 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, கோலாலம்பூர் நடவடிக்கை அறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 39 தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், தீ இதர பகுதிக்கு பரவாமல் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தனர்.
சூரியா கேஎல்சிசி-யிலுள்ள, முதலாவது மாடியிலுள்ள, சம்பந்தப்பட்ட இரு மையங்களும் 100 விழுக்காடு தீக்கிரையானது.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.