கோலாலம்பூர், மே 5 -கடுமையாக நோய் வாய்ப்பட்டவர்கள் மட்டுமே அரசாங்க மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவுக்கு செல்லும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நோயாளிகளில் பலருக்கு நோயின் கடுமை குறித்த புரிந்துணர்வு இல்லாமல் இருக்கிறது. வலி குறைவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் மனப்போக்கு மக்களிடையே இருந்து வருவதாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசனை நிபுணர் டத்தோ டாக்டர் Alzamani Mohammad Idrose தெரிவித்தார்.
அவசரமான சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்குவதுதான் தீவிர சிகிச்சை பிரிவின் பணியாகும். ஆனால் அவசரம் என்ற சூழ்நிலையில் இல்லாதவர்கள் உதாரணத்திற்கு சாதாரன சளிக் காய்ச்சல் இருந்தால்கூட உடனடியாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரவேண்டியதில்லை.
இப்படி அவர்கள் வருவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படும்போது ஆத்திரமும் ஏமாற்றமும் அடைகின்றனர் என்பதை டாக்டர் Alzamani சுட்டிக்காட்டினார்.
உயிரா – மரணமா என்ற போராட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்குத்தான் உடனடியாக சிகிச்சை வழங்கும் முன்னுரிமையை தீவிர சிகிச்சை பிரிவின் பணியாளர்கள் கொண்டுள்ளனர் என்பதை பொதுமக்கள் உணந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.