Latestமலேசியா

போலி பண கோரிக்கை கல்லூரியின் இயக்குநருக்கு ரி.ம 180,000 அபராதம்

கோலாலம்பூர், மே 7 – 267,000 ரிங்கிட் போலி கோரிக்கை மேற்கொண்டது தொடர்பில் ஒரு கல்லூரியின் இயக்குநரும் நிர்வாகியுமான ஆடவருக்கு 180,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 51 வயதுடைய Marsam Buheraருவுக்கு எதிராக கோத்தா கினபாலு சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 15 குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டார். குற்றவியல் சட்டத்தின் 471 ஆவது விதி மற்றும் 465 ஆவது விதியின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஒவ்வொரு குற்றத்திற்கும் 12,000 ரிங்கிட் அபராதம் அல்லது 15 குற்றங்களுக்கும் தலா 4 மாதம் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கோத்தா கினபாலுவில் Kolej Eastern என்ற கல்லூரியின் உரிமையாளருமான Marsam, Infoteguh Sdn Bhd நிர்வாக இயக்குனராகவும் இருந்தவேளையில் 2018ஆம் ஆண்டு எழுதப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி போலி பணக் கோரிக்கையை சமர்ப்பித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!