கிசுமு. மே 8 – கென்யாவில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதோடு மேலும் 75பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கென்யாவில் பல இடங்களில் மேலும் எண்மர் மாண்டதாக அரசாங்க பேச்சாளர் Isaac Mwaura தெரிவித்தார். வெள்ளப் பேரிடரால் 47,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
நாடு முழுவதிலும் வெள்ளத்தினால் 286,011த்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோசமான இயற்கை பேரிடரினால் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பாலங்களும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டன.