டோஹா, மே-15, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் UKM, கட்டாரில் தனது campus கிளை வளாகத்தை அமைத்து, மலேசிய உயர் கல்வியை உலக அரங்கிற்குக் கொண்டுச் சென்றுள்ளதாக பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
UKM-மைப் பின்பற்றி இதர உள்ளூர் பல்கலைக்கழகங்களும் வெளிநாடுகளில் கிளைகளைத் திறக்க இது வழிகோலும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலாய் மொழியை முதன்மை மொழியாகக் கொண்டு தொடங்கப்பட்ட பொது உயர் கல்விக் கூடமான UKM, இன்று கட்டாரில் கால் பதித்திருப்பது கூடுதல் சிறப்பு என்றார் அவர்.
மலாய் மொழியை முதன்மையாகக் கொண்ட பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி ஆரம்பக் காலத்தில் மகஜரில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் என்ற முறையில், UKM இன்று ஓங்கி வளர்ந்து நிற்பதைக் கண்டு உள்ளபடியே தாமும் பெருமைக் கொள்வதாக அன்வார் சொன்னார்.
டோஹாவில் UKM campus வளாகத்தை டத்தோ ஸ்ரீ அன்வார் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
உலகப் பொருளாதார ஆய்வரங்கில் பங்கேற்றும் பொருட்டு பிரதமர் 3 நாள் பயணமாக கட்டார் சென்றுள்ளார்.