கோலாலம்பூர், மே 15 – மழலையர் கல்வி தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரையிலும் கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு ஊடுருவி வருகிறது.
அதிலும் குறிப்பாக 2027ஆம் ஆண்டு அறிமுகம் காணவுள்ள Jerayawara Kurikulum எனும் பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டத்தில் அதிகமாக அதன் தாக்கம் இருக்குமென முனைவர் குமரன் வேலு இராமசாமி விவரித்தார்.
அந்தவகையில் கல்விமுறையில் நுழைந்துள்ள செயற்கை நுண்ணறிவு, புதியவடிவில் கல்வி முறையைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் அது இட்டுச் சென்று கொண்டிருக்கிறது எனலாம்.
இதனிடையே, பெற்றோர்களுக்கும் இந்த கலைத்திட்ட மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் எனும் நோக்கில் மின்னியல் யுகத்தில் தமிழ்க்கல்வி எனும் நிகழ்ச்சியை தமிழ் அறவாரியம் முன்னேடுத்துள்ளது என்கிறார் அவ்வாரியத்தின் பொருளாளர் குணசேகரன்.
தமிழ் அறவாரியம், தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர் கழகம் இணைந்து ஏற்பாடுச் செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி, வருகின்ற மே 18 ஆம் திகதி இரண்டாம் முறையாக கெடாவிலும், தொடந்து மூன்றாவது அங்கம் 22 ஜூன் அன்று ஜோகூரிலும் நடைபெறவுள்ளது.
‘மின்னியல் யுகத்தில் தமிழ்க்கல்வி’ எனும் கலந்துரையாடலில், தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு இலக்கவியலின் பங்கு, பெற்றோரிடையே பாடத்திட்ட உருமாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வு வழங்குதல் என 3 பகுதிகளாக நடைபெறும் என்கிறார் அதன் தலைவர் A.K. Krishnan.
டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அது குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம் என்கிறார் அவர்.
ஆகையால், விரைந்து கூகள் படிவம் வழி பதிந்து, தொழில்நுட்பத்துடன் தமிழ்ப்பள்ளிகளை வளைப்படுத்தம் இந்நிகழ்ச்சிக்கு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் அணிவகுக்குமாறு ஏற்பாடுக் குழுவினர்கள் சார்பாக அதன் தலைவர் A.K. Krishnan. கேட்டுக்கொண்டார்.