பெட்டாலிங் ஜெயா, மே 16 – பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவித்தித்துகிறது அரசாங்கம்.
இருப்பினும் பேரரசரின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்தான் நடைபெறும் என அரசாங்க பேச்சாளரும் தொடர்புத் துறை அமைச்சருமான பாமி பாட்சில் தெரிவித்திருக்கிறார்.
மாமன்னரின் முடிசூட்டு விழா ஜூலை 20ஆம் திகதியும் மற்றும் இதர சில நிகழ்ச்சிகளும் ஜூலை மாதம் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்னுரிமை கொடுத்து மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி சுல்தான் இப்ராஹிம் நாட்டு 17வது மாமன்னராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.