ஜோகூர் பாரு, மே 20 – ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட இரத்தக்களரி தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்கிறது.
அந்த தாக்குதல் தொடர்பில், இதுவரை ஏழு பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதை, ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஸ்னர் எம் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த தாக்குதல் தொடர்பில், புதிய முன்னேற்றங்கள் இருந்தால் அறிவிக்கப்படும் எனவும் குமார் சொன்னார்.
அதுவரை, போலீஸ் தொடர்ந்து சுமூகமான முறையில் விசாரணையை மேற்கொள்ள போதுமான கால அவகாசமும், இடமும் அளிக்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 2.54 வாக்கில், உலு திராம் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், எழுவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கைதுச் செய்யப்பட்டவர்களில் ஐவர், தாக்குதலை மேற்கொண்ட ஆடவனின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர். இதர இருவர் உயர்கல்விக்கூட மாணவர்கள் ஆவர்.
அந்த தாக்குதலை மேற்கொண்ட ஆடவனுடன், இரு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட வேளை ; மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.