Latestமலேசியா

ரவாங்கில் ‘Oh Yeah Banana leaf’, உணவகத்தின் 4ஆவது கிளை திறப்பு

ரவாங், மே 20 – ‘Oh Yeah Banana Leaf’ உணவகத்தின், 4ஆவது கிளை நேற்று ராவாங்கில் திறப்பு விழா கண்டது.

மலேசிய திரையுலகில் மிகவும் பிரபலமான வீடு புரொடக்ஷனின் தயாரிப்பாளரும் நடிகருமான டேனிஸ் குமார் தனது வணிக பங்காளிகளான பாபு தமிழன் மற்றும் Vincent Dass-உடன் இணைந்து இந்த உணவகத்தின் புதிய கிளையை திறந்துள்ளார்.

புக்கிட் பிந்தாங்கில் இதன் முதல் கிளை, தனது சிறப்பு அம்சமான bamboo பிரியாணி மற்றும் வாழை இலை உணவால் பலரது மனதையும் கவர்ந்தது.

இதனிடையே, தனது நண்பர் பாபு தமிழனின் தாயாரின் யோசனையில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் ‘kari kepala ikan’ மிகவும் பிரபலம் என்கிறார் இதன் இணை இயக்குநருமான டேனிஸ் குமார்.

ரவாங் aeon பேரங்காடி அருகாமையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் 4வது கிளையை ம.இ.காவின் உதவி தலைவர் டத்தோ டி. மோகன் அதிகாரப்பூர்வமாகக் திறந்து வைத்தார்.

மேலும் உள்ளூர் களைஞர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.

150 பேர் அமைர்ந்து உணவு உண்ணும் வசதியுடன், catering வசதியையும் ரவாங் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கவுள்ளதாக அதன் மற்றொரு இணை இயக்குநர் Vincent dass தெரிவித்தார்.

அருசுவை உணவு, அதுவும் வாழை இலை உணவை யாருக்குத்தான் பிடிக்காது? ‘அப்படிபட்ட உணவை சுட சுட பரிமாறி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ‘Oh Yeah Banana Leaf’ உணவகத்தின் இந்த 4வது கிளையும் அமோக வரவேற்பை பெரும் என அதன் தலைமை நிர்வாகி பாபு தமிழன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!