அங்காரா, மே 21 – ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் எந்த ஒரு சமிக்ஞையையும் வெளியிடவில்லை.
ஈரானிய மூத்த தலைவர்கள் சிலரின் உயிரைப் பலிகொண்ட அந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பில் துருக்கியே அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விசாரணையில் அது தெரிய வந்துள்ளது.
அந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், அது பயணித்த பாதை நெடுகிலும், அதன் சமிக்ஞையை அடையாளம் காணும் முயற்சியில் தோல்வி அடைந்ததாக, துருக்கியேவின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காடிர் உரலோக்குலு கூறியுள்ளார்.
அதனால், அந்த ஹெலிகாப்டரில், சமிக்ஞை அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வில்லை எனும் சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
இதனிடையே, அவ்விபத்துக்கான உண்மை காரணத்தை கண்டறியும் விசாரணையில், தெஹ்ரானுக்கு உதவ மாஸ்கோ தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு மன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.