Latestமலேசியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் பரிதாப நிலை ; பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளது

கோலாலம்பூர், மே 21 – நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் மகனை பராமரிக்க போதிய வசதி இல்லாமல் அவதியுறும் தம்பதியின் பிரச்சனை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த தம்பதி குறித்து, தகவல் அறிந்த பொதுமக்கள் அதனை உடனடியாக பகிருமாறு, பிரதமர் தமது அரசியல் செயலாளர் அஹ்மாட் பர்ஹான் பெளசி மூலம், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அந்த தம்பதி குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், கருத்துகள் பதிவிடும் பகுதியில் அதனை பதிவிடலாம். நாங்கள் அவர்களை தொடர்புக் கொள்ள அது உதவியாக இருக்கும்” என பெளசி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுவாசக் குழாய் பொருத்தி இருக்கும் மகனோடு, அந்த தம்பதி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

சம்பந்தப்பட்ட தம்பதியின் மகன், சுவாசக் கருவி இன்றி சுவாசிக்க முடியாத சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் கெடா, குவாலா மூடாவிலுள்ள, தாமான் கோத்தா நெலாயான் கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும், மீனவரான அச்சிறுவனின் தந்தை அன்றாடன் ஊதியத்திற்கு வேலை செய்யும் மீனவர் எனவும், அரெனா மோதோர் எனும் முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவ நினைப்பவர்கள், 0210029000677695 என்ற பேங் சிம்பானான் நேஷனல் வங்கிக் கணக்கு வாயிலாக பணம் கொடுத்து உதவலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!