Latestமலேசியா

சுக்காய்யில் ஆக்சிஜன் கயிறு சிக்கியதால் முக்குளிப்பவர் மரணம்

சுக்காய், மே 23 – Pantai Geliga கடல் பகுதிக்கு அருகே மூழ்கிய கப்பலின் இரும்பை வெட்டும் பணியல் ஈடுபட்டிருந்த முக்குளிப்பவரின் ஆக்சிஜன் கயிறு சிக்கிக்கொண்டதால் அவர் மரணம் அடைந்தார். கெமமான் Kampung Kubur Tok Panjang என்ற முகவரியைச் சேர்ந்த Muhammad Aiman Zambri நேற்று மாலை மணி 4.45 அளவில் இறந்து கிடந்ததை மற்றொரு முக்குளிப்பாளரான Sukril Aman Rabilalim கண்டதாக கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் Hanyan Ramlan தெரிவித்தார். கடலுக்கு கீழே மூழ்கிய கப்பலின் இரும்பை வெட்டும் பணியில் Muhammad Aiman மற்றும் Sukril Aman ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார்.

அதற்கு முன்னதாக அந்த இரண்டு முக்குளிப்பு பணியாளர்களும் மாலை 4 மணிக்கு கடலுக்கு அடியில் சென்று தாங்கள் வெட்டவேண்டிய மூழ்கிய கப்பலின் இரும்பின் அளவில் அடையாளமிட்டனர். அந்த இருவரும் கடலின் அடியிலிருந்து மேலே வர முயன்றபோது அவசர கயிறு மற்றும் இரும்பில் அடையாளமிட்ட கயிறில் ஆக்சிஜன் கயிறு சிக்கிக் கொண்டதால் வெளியேற முடியாமல் Muhammad Aiman உயிரிழந்தார் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!