கோலாலம்பூர், மே 23 – ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனது 4 வயது மகளை கொலை செய்த குற்றத்திற்காக பொது தற்காப்பு படையின் முன்னாள் தொண்டூழியராக பணியாற்றிய ஆடவனுக்கு 35 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படிகளை கிள்ளான் உயர்நீதிமன்றம் விதித்தது. 41 வயதுடைய Mohd Sazry Mohd Taha குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி Norliza Othman தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பின்போது குற்றவாளியின் முறையீடு மற்றும் பொதுமக்களின் நலன் போன்ற அம்சங்களும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நண்பகல் ஒரு மணியிலிருந்து மறுநாள் நண்பகல் ஒரு மணிவரை கிள்ளான் , Kampung Sungai Udangகில் Zahira Sofia Ahmad Mu’iiz என்ற சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக கொலைக் குற்றச்சாட்டை Mohd Sazry எதிர்நோக்கிருந்தார். இந்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு பதிலாக 35ஆண்டு சிறையும் 12 பிரம்படியும் விதிப்பது நியாயமானது என நீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி Norliza Othman தமது தீர்ப்பில் தெரிவித்தார்.