கோலாலம்பூர், மே 25 – UITM எனப்படும் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகம் இன ஒதுக்கல் கொள்கையை அமல்படுத்திவருவதாக கட்டுரையாளர் Andrew Sia குறிப்பிட்டது தொடர்பில் அவருக்கு எதிராக நேற்று மாலை ஆறு மணிவரை 14 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த கட்டுரையை எழுதியவர் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி MCMC எனப்படும் தொடர்பு ,மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain தெரிவித்திருக்கிறார். குற்றவியல் சட்டத்தின் 504 ஆவது விதி, 1955 ஆம் ஆண்டின் சிறு குற்றங்கள் சட்டத்தின் 14ஆவது விதி, 1998ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.