அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மொட்டை அறிக்கைகள் அடிப்படையில் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லையென பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் கேட்டுக் கொண்டார். ஒருவருக்கு எதிராக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஆதாரங்கள் இருக்க வேண்டும். முறையான புகாரர்கள் இன்றி அவர்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்று அவர் கேள்வி எழுப்பினார். ஈப்போவில் துங்கு பைனுன் மருத்துவ மனையில் பணிபுரிகின்ற ஆறு மருத்துவர்களுக்கு எதிராக பாலியல் மற்றும் தொல்லைக் கொடுத்துள்ளதாக மொட்டை அறிக்கைகள் வெளியாகின. அது தொடர்பாக தக்க ஆதாரங்கள் இன்றி , புகார்தாரர்கள் இன்றி எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என அவர் கேள்வி எழுப்பினார்.
இது போன்று வரும் வெளி வரும் மொட்டை அறிக்கைகளை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சிடமும் வலியுறுத்தியுள்ளதாக சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் அச்சலிங்கம் கேட்டுக்கொண்டார். உண்மையில் குற்றங்கள் புரியும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் , அதற்கு ஆதாரங்கள் தேவையென அவர் நினைவுறுத்தினார். நேற்று ஈப்போவில் உள்ள கிரீன் டவுன் மருந்துவ மனையில் எச்ஐவி,மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நினைவு கூறும் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்விற்கு வருகை அளித்தப் பின்னர் சிவநேசன் அச்சலிங்கம் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார். பேராவில் எச்ஐவி,மற்றும் எயிட்ஸ் நோய் பரவுவதை தடுக்க தொடர்ந்து சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.