Latestஉலகம்

தற்போது ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இரத்தம் உறைவுக்கு AstraZeneca தடுப்பூசி காரணமல்ல

கோலாலம்பூர், மே 28 – தற்போது ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இரத்தம் உறைதல்  போன்ற  பிரச்சனைகள்  AstraZeneca   தடுப்பூசியுடன் தொடர்பில்லாதவை . இதற்கு காரணம்  அண்மையக் காலங்களில் தடுப்பூசியை பயன்படுத்தும்   தடுப்பூசி திட்டங்கள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சின் முன்னாள்   தலைமை இயக்குனர்  டான்ஸ்ரீ   டாக்டர்   Noor  Hisham Abdullah   தெரிவித்திருக்கிறார்.  புகைபிடித்தல், கொலஸ்ட்ரால்  மற்றும் நீரிழிவு போன்ற ஆபத்தான பிற காரணங்கள்   மாரடைப்பு, பக்கவாதம் மற்றும்  இரத்த உறைதலுக்கு  காரணமாக இருப்பதாக  அவர்  சுட்டிக்காட்டினார். 

இரத்த உறைவு தடுப்பூசி தூண்டப்பட்ட (VITT)  எனப்படும்  Immune Thrombotic Thrombocytopenia (VITT)  மற்றும் பிற இரத்த உறைதல் பிரச்சனைகளின் பக்க விளைவுகளை வேறுபடுத்தும்படி மக்கள் கேட்கின்றனர். VITT நோயைக் கண்டறிவதற்கான அளவுகோல்கள் தடுப்பூசி போட்ட நான்கு வாரங்களுக்குள் பக்கவிளைவுகள் ஏற்பட வேண்டும் மற்றும் குறைந்த இரத்த அணுக்கள் இருந்தால்தான்  இந்த நிலை ஏற்படும் . மருத்துவ அதிகாரியின் பரிசோதனை மற்றும் உறுதிப்படுத்தாமல்  வெறும்  அணுமானத்தினால் இதுகுறித்து கருத்துரைக்க முடியாது  என்று  Noor  Hisham  இன்று தெரிவித்தார்.  சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் உண்மைகள் மற்றும் தவறான விளக்கங்களை பகுப்பாய்வு செய்வதில் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!