Latestமலேசியா

முக்கிய விசாரணையொன்றை மூடுவதற்கு பேரம் பேசி 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் வாங்கிய இரு போலீஸ்காரர்கள்

கோலாலம்பூர், மே-28 – இஸ்ரேலிய ஆடவனுக்கு சுடும் ஆயுதங்கள் வாங்கப்பட்டது தொடர்பான விசாரணையை மூடுவதற்காக  RM1 million ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டை, இரு மூத்த போலீஸ்காரர்கள் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரியிருக்கின்றனர்.

புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையில் பணிபுரியும் 54 வயது ACP Chin Khiam Kong, 42 வயது DSP Suhairon Abdullah-வே அவ்விருவராவர்.

28 வயது Khoo Zixian எனும் ஆடவர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையை மூடுவதற்கு, அவ்விருவரும் கூட்டாக ஒப்புக் கொண்டு பேரத்திற்கு இணங்கியிருக்கின்றனர்.

இஸ்ரேலிய ஆடவனுக்காக சுடும் ஆயுதங்கள் வாங்கப்பட்டதில்  தேச பாதுகாப்பு தொடர்பில் Zixian விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பேரம் பேசப்பட்ட நாளான ஏப்ரல் 8-ஆம் தேதி மாலையே கார் நிறுத்துமிடத்தில் வைத்து அவர்கள் லஞ்சப் பணத்தைப் பெற்றதாக ஊழல் விவகாரங்களுக்கான கோலாலம்பூர் சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் லஞ்சப் பணத்தை விட 5 மடங்குக்கும் குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், அதே நபரிடம் இருந்து தனியாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை பேரம் பேசி லஞ்சமாக பெற்றதாக, Khiam Kong மீது தனியாக மேலும் 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும், தலா 40 ஆயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு அல்லது இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு வரும் ஜூலை 30-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!