Latestமலேசியா

ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் ETS ரயில் சேவைக்கு புதிய அட்டவணை

கோலாலம்பூர், மே 30 -இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முதல் ETS சேவைக்கான புதிய அட்டவணையை அறிமுகப்படுத்துவதாக KTMB எனப்படும் keretapi Tanah Melayu Berhad அறிவித்திருக்கிறது. KL Sentral – Ipoh – KL Sentral மற்றும் KL sentral -Butterworth – KL Sentral வழிதடங்களுக்கு ETS ரயில் சேவை தினசரி 10 பயணங்களை கொண்டிருக்கும். அதே வேளையில் KL Sentral – Padang Besar – KL sentral வழிதடத்திற்கு தினசரி 8 ETS ரயில் சேவை மேற்கொள்ளப்படும் . மேலும் Gemas – Butterworth – Gemas- மற்றும் Gemas – Padang Besar -Gemas சேவைக்கு தினசரி இரண்டு ETA பயணச் சேவை இடம்பெற்றிருக்கும் என KTMB வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rawang -KL Sentral பிரிவில் கிள்ளான் பள்ளத்தாக்கு Double Track இரட்டை தண்டவாள திட்டத்திற்கான முதலாவது திட்டம் நிறைவடைந்ததும் இந்த மறுசீரமைப்பில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

KL Sentral-Ipoh-KL Sentral, KL Sentral-Butterworth-KL Sentral மற்றும் KL Sentral-Padang Besar-KL Sentral வழிதடங்களுக்கு தற்போதுள்ள 32 சேவைகளில் இருந்து கூடுதலாக ஆறு ETS Ekspres சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் . ரயில் அடிப்படையிலான பொது போக்குவரத்தை வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தை இந்த கூடுதல் சேவைகள் கொண்டிருப்பதாக KTMB தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!