கூடாட் , மே 30 – சபா கடல் பகுதி வழியாக சுமார் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள 765 கிலோ உலர்ந்த ஆமை இறைச்சிகளை கடத்தும் முயற்சி நேற்று முன்தினம் இரவு முறியடிக்கப்பட்டது. Kudat மாவட்டத்தின் கடற்பரப்பில் அழிந்துவரும் ஆமை இனத்தின் உலர்ந்த இறைச்சிகள் 19 சாக்குப் பைகளில் இருந்ததை மலேசிய கடல் பாதுகாப்பு அமலாக்க நிறுவனத்தின் அதிகாரிகள் கண்டுப் பிடித்தனர்.
Kudat Kampung Tajau Laut கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவை கண்டுப்பிடிக்கப்பட்டன. ஆமைகளின் உலர்ந்த இறைச்சிகளுக்காக கிட்டத்தட்ட 1,000 ஆமைகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக கூடாட் கடல் மண்டல பாதுகாப்பு நிறுவத்தின் கமாண்டர் Maurice Grenville Abeyeratne தெரிவித்தார்.
மேலும், 19 ஆமை தோல்களைக் கொண்ட மூட்டைகளும் கண்டெடுக்கப்பட்டது. இவை வெளிநாடுகளின் சந்தைக்காக கடத்த முயன்றதாக நம்பப்படுகிறது. 1997 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் இறைச்சி கடத்தல் முயற்சியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.