ஜோகூர் பாரு, ஜூன் 6 – குறைந்தது மூன்று வாரங்களாக காணாமல்போன ஜோகூர் கோத்தா திங்கியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் Taman Sentosa வில் தமது காருக்குள் இறந்து கிடந்தார். 33 வயது முகமட் ஹமிசான் ரம்லி ( Muhammad Hamizan Ramli ) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் மே மாதம் 18ஆம் தேதி முதல் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தார்.
நேற்று காலை மணி 11.20 அளவில் காரில் ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக பொதுமக்களிடமிருந்து அவசர தகவல் கிடைக்கப் பெற்றதாக தென் ஜொகூர் பாரு OCPD துணை கமிஷனர் ரவுப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார். அக்காரின் ஓட்டுனர் இருக்கையில் முகமட் ஹமிசான் இறந்து கிடந்ததை சுல்தானா ஹமினா மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக ரவுப் செலமாட் தெரிவித்தார்.