Latestமலேசியா

முதலீட்டுத் திட்ட மோசடி; Whatsapp group-பில் சேர்க்கப்பட்டு 40 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த மூதாட்டி

கோலாலம்பூர், ஜூன்-7 – முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் whatsapp group-பில் சேர்க்கப்பட்டு, RM4 million ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்திருக்கிறார் சிலாங்கூர், ஷா ஆலாமைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர்.

மார்ச் மாத வாக்கில் facebook-கில் முதலீட்டுத் திட்டம் குறித்த விளம்பரத்தைப் பார்த்தவர், பின்னர் whatsapp group-பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலீடு செய்யும் பொருட்டு, அந்நிய நேரடி முதலீடு குலாம் (FDI Hub) கணக்கைத் திறக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

11%-13% வரை வட்டி கிடைக்கும் என்றும், தொடர்ந்து பணம் போட்டு வந்தால் இலாபம் கொட்டும் என்றும் அம்மூதாட்டி நம்ப வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் FDI Hub கணக்கைத் திறந்து, மார்ச்சில் இருந்து மே மாதக் கடைசி வரை 42 தடவையென மொத்தமாக 47 லட்சத்து 49 ஆயிரத்து 214 ரிங்கிட் பணத்தை அதில் போட்டுள்ளார்.

‘முதலீடு’ செய்த பணத்திற்கு எப்படியும் RM11.3 million வரையில் வட்டி வந்திருக்கும் என்ற ஆர்வத்தில் பணத்தை மீட்க முற்பட்ட போது தான், தனது வங்கிக் கணக்கிற்கு பணம் எதுவும் வரவில்லை என்பதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

அம்மோசடி சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்திய ஷா ஆலாம் போலீஸ், முதலீட்டு விளம்பரங்கள் குறித்து மேலதிக கவனத்தோடு இருக்குமாறு பொது மக்களை மீண்டும் நினைவுறுத்தியது.

குறிப்பாக சமூக ஊடகங்களில் அது போன்ற விளம்பரங்களைக் கண்டு பணத்தை ஏமாற வேண்டாம் என அது கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!