ரொம்பின், ஜூன்-9 – பஹாங், ரொம்பினில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்தும் டிரேய்லரும் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்; 37 பேர் காயமுற்றனர்.
அதிகாலை 1.30 மணியளவில் பஹாவ் முச்சந்தி அருகே
Jalan Kuantan – Segamat சாலையில் அவ்விபத்து ஏற்பட்டது.
2 ஓட்டுநர்கள் உட்பட 39 பயணிகளுடன் வந்த பேருந்து, டிரேய்லருடன் மோதி சாலை சரிவில் குப்புற சாய்ந்ததாக, ரொம்பின் போலீஸ் கூறியது.
திரங்கானுவில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக
மலாக்கா, Jeram Masjid Tanah தேசியப் பள்ளியைச் சேந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை அந்த சுற்றுலா பேருந்து ஏற்றியிருந்தது.
மரணமடைந்த இருவரில் ஒருவர் ஆசிரியர்; மற்றொருவர் இரண்டாவது ஓட்டுநர் ஆவார்.
விபத்தின் போது கும்மிருட்டு என்பதால், பஹாவ் முச்சந்தியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஓட்டுநர், இரும்புக் கம்பிகளை ஏற்றியிருந்த டிரேய்லருடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மரணமடைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் வேளை, காயமடைந்தோர் மருத்துமனைகளுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.